நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 25ம் தேதி 12ம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாணவர் செல்வ சூர்யாவுக்கும், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்ட்து. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பால் செல்வ சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் பாப்பாக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 11ம் வகுப்பு படிக்கும் சுடலைமணி, பைசுல் சமீர், சைபுதீன் என்ற 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைதுசெய்தனர். இது மாணவர்களுக்கு இடையேயான சண்டை மட்டுமா அல்லது ஹிந்து சமுதாய மக்களை குழப்பி, சண்டையை மூட்டிவிட்டு மதமாற்றம் செய்யும் அபிரகாமிய மதத்தினரின் சதித் திட்டத்தின் ஒருபகுதியா இது? என சமூக ஊடகங்களில் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.