தமிழகமெங்கும் தி.மு.க கவுன்சிலர்கள் நடத்தும் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சேலம், அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயிலில் அதன் அர்ச்சகராக பணிபுரிந்த கண்ணன் சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘இக்கோயிலில் 21 ஆண்டாக பணிபுரிகிறேன். தி.மு.,வை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் மஞ்சுளா கோயிலுக்கு இடையூறு செய்கிறார். மணி அடிக்கக்கூடாது, பூஜை செய்யக்கூடாது என்பதோடு, அடியாட்களை வைத்தும் மிரட்டுகிறார். செயல் அலுவலரிடம் பொய் புகார் கொடுத்து என்னை வெளியேற்ற பிரச்சனை செய்கிறார். இதனால், எனக்கும் என் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இதற்கு காரணம் கவுன்சிலர் மஞ்சுளாதான். மாவட்ட ஆட்சியர், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என கூறினார். இதையடுத்து அன்று மாலையே கண்ணன் கோயிலில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். புது அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுளா, ‘அர்ச்சகர் கண்ணன் இரவு 12:00 மணிக்கு மேல் கோயில் நடையை திறந்து வைத்தார். இரவு 10:30 மணிக்கு மேல் மணி அடிக்கிறார். இதனால் படிக்கும் மாணவர்கள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தெரிவித்த புகார்படி கவுன்சிலர் எனும் முறையில் மணி அடிக்க வேண்டாம் என தெரிவித்தேன். அடியாட்களை வைத்து மிரட்டுவதாக, தாக்குவதாக கண்ணன் கூறுவது பொய்’ என கூறியுள்ளார்.