குஜராத் மாடலில் கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம்

விஜய் ரூபானி, குஜராத் முதல்வராக இருந்த போது 2019ல், மின்னணு நிர்வாகம் திட்டமான ‘முதல்வரின் டாஷ்போர்டு திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம், துறைகள், அவற்றின் பணிகள், நகரம் முதல் கிராமம் வரையிலான அரசு செயல்பாடுகளை தனது அலுவலகத்தில் இருந்தே முதல்வர் நேரடியாக கண்காணிக்க முடியும். களப்பணி அதிகாரிகளுடன் முதல்வர் நேரடியாக பேச முடியும். வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாடல் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கடுமையாக கிண்டல் செய்துவந்த கேரள கம்யூனிஸ்ட்கள், தற்போது அதே குஜராத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள ‘முதல்வரின் டாஷ்போர்டு’ குறித்து ஆய்வு செய்ய கேரள மாநில தலைமை செயலாளர் தலைமையில் ஒரு அதிகாரிகள் குழுவை குஜராத் அனுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறந்த நிர்வாகத்திற்கு குஜராத் மாடலை தாராளமாக பின்பற்றலாம் என பா.ஜ.க கூறியுள்ளது. முன்னதாக, கடந்த 2009ல் அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியான அப்துல்லா குட்டி, குஜராத் மாடலை பாராட்டி பேசியதுடன், மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க மோடி மாடல் நிர்வாகத்தை பின்பற்ற வேண்டும் என கூறினார். இநையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.