மாநில மொழிகளில் சட்டப்படிப்பு

மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘அவரவர் மொழிகளில் சட்ப்படிப்புகள் வருவது மிக பயனுள்ளதாக இருக்கும். நீதிமன்ற கட்டமைப்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். தொழில்நுட்பம் இக்காலக்கட்டத்தில் மிக அவசியமானது. சட்டங்களும், உத்தரவுகளும் தெளிவான பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். தீர்ப்புகளின் போது மனித உணர்வுகள் தொடர்பான விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காலாவதியான சட்டங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். சட்டப்படிப்புகள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும். சட்டப்படிப்புகள் தாய்மொழிகளில் படிக்கும் நிலை வர வேண்டும். இது ஊக்குவிக்கப்பட வேண்டும். இது சட்டம் படிக்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையை தரும். சட்டத்துறையில் டிஜிட்டல் மயம் ஆக்கும் முயற்சிகள் அதற்கான பணிகள் நடந்து கொண்டுள்ளன. இன்று சிறிய நகரங்கள், கிராமங்களில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுவானதாகி வருகிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டில் உலகளவில் நடந்த மொத்த பண பரிமாற்றத்தில் 40 சதவீதம் நமது நாட்டில் நடந்துள்ளது’ என பேசினார்.