ஹிந்து மகா சம்மேளனத்தில் கிறிஸ்தவக்குழு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று துவங்கவுள்ள 10வது அனந்தபுரி ஹிந்து மகா சம்மேளனத்தில் முதல்முறையாக  கிறிஸ்தவ சங்கம் மற்றும் சமூக நடவடிக்கைக்கான கூட்டணி (காசா) என்ற அமைப்பு பங்கேற்கிறது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இதனை துவங்கிவைக்கிறார். ஹிந்து தர்ம பரிஷத் ஏற்பாடு செய்த 5 நாள் நிகழ்வில் ‘லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத், ஹலால் பொருளாதாரம்’ பற்றிய விவாதத்தின் ஒரு பகுதியாக காசா குழு இணைகிறது.

இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் எம் கோபால் கூறுகையில், கடந்த காலத்திலும் கிறிஸ்தவர்கள் இந்நிகழ்வில் தனி நபர்களாக கலந்துகொண்டனர். ஆனால், ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் இவ்விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. கேரளாவின் தற்போதைய சூழ்நிலை ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. லவ் ஜிஹாத், நில ஜிகாத் போன்றவை இரு சமூகத்தினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள். முஸ்லிம் பயங்கரவாதத்தை இரு சமூகங்களும் எதிர்கொள்கிறது. இடதுசாரிகளும் முஸ்லிம் வரலாற்றாசிரியர்களும் அரசின் வரலாற்றைத் திரித்துவிட்டனர். நாங்கள் வரலாற்றை சரியான கண்ணோட்டத்தில் வைக்க விரும்புகிறோம். மாநாடு அந்த திசையில் முயற்சிகளை எடுக்கும்’ என்றார்.

2009ல் லவ் ஜிஹாத் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்கவைக்கும் முஸ்லிம்களின் முயற்சிகளை முறியடிக்க காசா விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளுடன் இணைந்தது. இந்த இரு அமைப்புகளும் இணைந்து பல லவ் ஜிஹாத் விஷயங்களை எதிர்கொண்டன. காசா அமைப்பில் சுமார் 5,000 கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் எந்த தேவாலயத்துடனும் இணைக்கப்படவில்லை, ஆனால் பாதிரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், பிற துரை சார்ந்த நிபுணர்கள் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.