தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும். தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது தமிழக பா.ஜ.க அலுவலகத்திற்கு 26ம் தேதி வரவேற்கின்றேன். உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு. தலைப்பு: “அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்” என தெரிவித்துள்ளார்.