தமிழக மின்வெட்டுக்கு யார் காரணம்?

தமிழகத்தில் பல இடங்களில் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடந்து வருகிறது. தங்கள் தவறை மறைக்க மத்திய அரசு மீது பழி போடவது, மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவது என தொடர்ந்து செயல்பட்டு வரும் தி.மு.க அரசின் மின்துறை அமைச்சர், மின்வெட்டு வராது கூறிய பிறகும் மின்வெட்டுத் தொடர்கிறது. இதனையடுத்து பல இடங்களில் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20ம் தேதி மொத்தமுள்ள 5 யூனிட்களில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. அதற்கு, மின்தட்டுபாடு ஏற்படவில்லை. அதனால் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்துள்ளது. அப்படி இருந்தும் எதற்காக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது? தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி அதன் மூலமாக தனியார் மின்சாரத்தை கொள்முதல் செய்து லாபம் பார்ப்பது தி.மு.க அரசுக்கு கைவந்த கலை. 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி வரை மட்டும் ரூ. 2000 கோடிக்கு மேல் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளனர். இதுபோல செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபடுகின்றர். சில சமயங்களில் தனியாரிடம் இருந்து கிலோ யூனிட்டை ரூ. 20க்கு கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்று செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் இருக்கும் 5 மின் உற்பத்தி நிலையங்களும் 85 சதவீதம் மின் உற்பத்தி செய்யம்போது மட்டும்தான் 72,000 டன் நிலக்கரி தேவைப்படும்’ என்று புள்ளி விவரங்களோடு குற்றம் சாட்டியுள்ளார்.