தி.மு.க ஆட்சியில், தமிழக அரசு மின்சாரத் துறையில் நடைபெறும் ஊழல்கள், தேவையற்ற செலவினங்கள், கடன்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘1.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், தமிழக அரசு மின்சார வாரியத்தை மீட்டெடுக்க எந்தவித வழிவகைகளையும் செய்யாமல் ஆடம்பர செலவினங்களால் மின்சாரத்துறையை (டான்ஜெட்கோ) பலவீனமாக்கும் வேலைகளை மட்டுமே செய்து வருகிறது. 16.04.2022 அன்று ஒரு எளிய காணொளி சந்திப்புக்கு , டான்ஜெட்கோ 2.7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மின் உற்பத்தியாளர்கள், தனியார் மின் வினியோகஸ்தர்கள், கோல் இந்தியா நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ செலுத்த வேண்டிய தொகை கோடிக் கணக்கில் உள்ளது. ஆனால் இந்த அரசு, மக்களின் வரிப் பணத்தை யாரோ ஒரு தனி நபரின் கஜானாவை நிரப்புவதற்காகவே முனைப்புடன் செயல்பட்டுவருகிறது’ என தெரிவித்துள்ளார்.