பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக்கின் புனிதக்கோயிலுக்கு சீக்கிய பக்தர்கள் குறிப்பிட்ட நாட்களில் சென்றுவர பாரதம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, இந்த வழித்தடத்தின் நோக்கம் மத யாத்திரை மட்டுமே. வேறு நிகழ்வுகளை அங்கு நிகழ்த்த தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழித்தடத்தில் செல்லும் பாரத புனித யாத்ரீகர்களுடன் தொடர்புகளை வளர்க்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அத்துடன், அங்கு வணிகக் கூட்டங்களை நடத்துகிறது பாகிஸ்தான். இதன் மூலமும், பாகிஸ்தான் 2019 கர்தார்பூர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. என பாரதம் குற்றம் சாட்டியுள்ளது. புலனாய்வு அமைப்புகள் இதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகின்றன. விரைவில் இந்த விவகாரம் பாகிஸ்தானிடம் எழுப்பப்படும் என கூறப்படுகிறது.