வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ எச்சரிக்கை

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக வங்கிகளுக்கு பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் கிரெடிட் கார்டினை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது. வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செயல்பட்டால் வங்கிகள் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவை தொகையை வசூலிக்கும்போது மிரட்டல் போன்ற மோசமான செயலில் ஈடுபடக்கூடாது. அப்படி வங்கிகள் பிரச்சனை செய்தால், வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் குறை தீர்ப்பாளரை அணுகலாம். இந்த விதிமுறைகள் வங்கிகள், பேமெண்ட் பேங்குகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும். டெபிட் கார்டினை வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே வங்கிகள் வழங்க வேண்டும். பண வரவு அல்லது கடன் கணக்கு வைத்திருப்போருக்கு டெபிட் கார்டுகள் வழங்க கூடாது. எனினும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்குகளுடன் வழங்கப்படும் ஓவர் டிராப்ட் வசதியை டெபிட் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.