குஜராத் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வட்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி, ஆட்சேபனைக்குரிய வகையில் டுவிட்டர் பதிவிட்டதற்காக அஸ்ஸாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது, இரு சமூகத்தினரிடையே பகையை உருவாக்க சதி செய்தல், சமூகத்தை அவமதித்தல், அமைதி சூழலை சீர்குலைத்தல் போன்ற ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை அசாம் அழைத்துச் சென்று விசாரணை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சமீபத்தில் அவர் வெளியிட்ட சில ட்வீட்கள் அரசு அதிகாரிகளின் வேண்டுகோளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் இந்த கைதினை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தினர்.