காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் யூசூப் கண்ட்ரோ உள்ளிட்ட இரு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. A++ வகை மிக ஆபத்தான இந்த பயங்கரவாதிக்கு பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்களை சுட்டு கொன்றதில் முக்கிய பங்கு உண்டு. யூசுப் கான்ட்ரூ, ஜம்மு காஷ்மீர் காவல்துறை குறிவைத்த டாப் 10 பயங்கரவாதிகளில் ஒருவர். இந்த நடவடிக்கையில், 3 ராணுவ வீரர்கள், பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.