டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் மிக மோசமான வன்முறை கலவரத்தை நிகழ்த்தினர். இதனால் அந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்க காவல்துறை கொடி அணிவகுப்பு, ரோந்து, டிரோன் கேமரா கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அதையடுத்து 9 புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை அகற்றப்பட்டன. இதனால் மேலும் பதற்றம் உருவானது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜகாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க தற்காலிகமாக தடை விதித்தது. தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு தள்ளி வைத்துள்ளது.