முதல்வர்கள் மீது போலீசில் புகார்

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் இழிவுபடுத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட வழக்கில், அக்டோபர் 2015ல் பர்காரியில் குரு கிரந்த சாஹிப்பின் கிழிந்த பக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில், 2007 முதல் 2017வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலிதள் அரசோ அல்லது 2017 முதல் 2022 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் நடந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் இவ்வழக்கு ஒரு முக்கிய விவாதப்பொருளானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​தனது கட்சி பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் பார்காரி அவமதிப்பு வழக்குகள் விசாரிக்கப்படும் என்று வாக்காளர்களுக்கு கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பதவியேற்று ஒரு மாதமாகியும், இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தான் அளித்த வாக்குறுதியை மதிக்கவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பஞ்சாப் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்) பொதுச் செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.