கலச யாத்திரையில் தாக்குதல்

மகாராஷ்டிர மாநிலம் கோரேகானில் உள்ள ஒரு சிவன் கோவிலில் இருந்து கலச யாத்திரை புறப்பட்டுச் சென்றது. கோரேகான் கிழக்கில் உள்ள அரே காலனியை யாத்திரைக்குழு அடையும் வரை அனைத்தும் அமைதியாகவே சென்றன. ஆனால், அரே காலனியில் கலச யாத்திரை சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். தனிப்பட்ட தவறான புரிதல் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றது, இந்த விவகாரத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை கூடுதல் ஆணையர் பிரவின் பட்வால் தெரிவித்துள்ளார். ஆனால், அமராவதியின் அச்சல்பூர் நகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு துலா கேட்டில் காவிக்கொடி ஏற்றப்பட்டதையடுத்து, அமராவதியிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்பது சற்றே சிந்திக்கத்தக்கது. மேலும், ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஷோபா யாத்திரைகள், ஏப்ரல் 16ம் தேதி நடந்த ஹனுமன் ஜெயந்தி ஷோபா யாத்திரைகளில் டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.