சாய்பாபா சிலை உடைப்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு பைக்குகளுக்கு இடையே நடந்த சாலை விபத்து வகுப்புவாத கலவரமாக மாறியது. முதலில் வாக்குவாதமாக துவங்கிய இந்த விவகாரம் மோசமடைந்து இரு பிரிவினருக்கு இடையேயான சண்டையாக மாறியது. இதனையடுத்து இரவில் திடீரென அங்குத் திரண்ட சுமார் 400 பேர் கொண்ட முஸ்லிம்கள் அடங்கிய கும்பல் ஒன்று சாலைகளில் வாகனம் ஓட்டிச் சென்றவர்களையும் பொதுமக்களையும் தாக்கினர். கற்களை எறிந்தனர். மேலும் அருகில் உள்ள கோயிலில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா சிலையை சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு உடைத்தெறிந்தனர். இத்தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர், சுமார் 10 கடைகள் உடைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சாயாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.