தேவை தமிழ்நாடு பைல்ஸ்

பகத்பாசில், நஸ்ரியா நடித்துள்ள ‘நிலை மறந்தவன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச். ராஜா, ‘ஏதோ சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளனர். ‘நிலை மறந்தவன்’ படம் உண்மையை, நாட்டில் நடப்பதை அப்படியே சொல்லும் படமாக உள்ளது. ‘காஷ்மீரில் பைல்ஸ்’ படம் போல கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி ‘தமிழ்நாடு பைல்ஸ்’ என்ற படத்தை எடுக்க வேண்டும். நாங்கள் கிறிஸ்துவையும், கிறிஸ்தவரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவர்கள் அதை வியாபாரமாக்கும் போது, மூடநம்பிக்கைகளை திணிக்கும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்கிறோம்’ என்று பேசினார்.