புறப்பட்டது புல்டோசர்

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஸ்ரீராம நவமி ஊர்வலத்தின் மீது முஸ்லிம் வன்முறை கும்பல் ஒன்று கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஊர்வலத்தில் சென்ற ஹிந்து பக்தர்கள் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எடுத்த விரைவான முயற்சிகள் விளைவாக, 84   குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும்,ம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 50 சட்டவிரோத கட்டுமானங்கள் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டது. மேலும், நகரில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து வதந்திகளை பரப்பியதற்காக மூன்று அரசு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கலவரக்காரர்கள் தப்ப முடியாது , அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள். பொது மற்றும் தனியார் சொத்துக்களை நாசப்படுத்தியதற்காக அவர்களிடம் இழப்பீடு வசூலிக்கப்படும். இதற்காக ‘உரிமைகோரல் தீர்ப்பாயம்’ அமைக்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.