ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி, “யோகா என்பது ஆயுர்வேதத்தின் ஆன்மீகத்தின் முகமாக உள்ளது. அதேபோல, ஆயுர்வேதம் யோகாவின் உடல் பகுதியாக உள்ளது. ஆயுர்வேதமும் யோகாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். யோகாவை ஒவ்வொருவரும் ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக வாழ தினமும் காலையில் 35 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். இது ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஆயுர்வேதம் மருத்துவ அறிவியல் அல்லது மூலிகை அறிவியல் அல்ல. இது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான ஒரு வழிமுறை. யோகா செய்வதால் நாம் பல நோய்களைத் தவிர்க்கலாம்.மாறும் பருவங்களுக்கு ஏற்ப நமது உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றியும் ஆயுர்வேதம் பேசுகிறது. ஆயுர்வேதம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதி. அது பஞ்சகர்மா. ஆயுர்வேதம் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பாகும். அதில் யோகாவும் ஒரு பகுதி. சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 75 நாட்கள் உள்ளன. யோகா தினத்திற்கான கவுண்ட்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது” என கூறியுள்ளார். சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் 8வது சர்வதேச யோகா தினத்தை, நாடு முழுவதும் உள்ள 75 முக்கிய இடங்களில் கடைபிடிக்க ஆயுஷ் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.