கொரானா பாதிப்பு காலம் முடிந்து இப்போதுதான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் புதிதாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இச்சூழலில், தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது அதிகபட்ச மக்கள் விரோத போக்காகும். இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வரும் 8ம் தேதி காலை 11 மணி அளவில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்கள் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார்.