பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ள ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா, அந்த காட்டூனில், பாகிஸ்தானின் தவறான வரைபடத்தைப் பதிந்துள்ளது. அந்த கார்ட்டூனில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானாக காட்டப்பட்டுள்ளது. பல நெட்டிசன்கள் தவறான வரைபடத்தை சுட்டிக்காட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவை விமர்சித்தனர். பாரதத்தின் தவறான வரைபடத்தை வெளியிடுவதற்கு எதிரான சட்டம் பொது மக்களுக்கு மட்டும்தானா ஊடக நிறுவனங்களுக்கு கிடையாதா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிக்கும் தவறான வரைபடத்தை செய்தி நிறுவனங்கள் காண்பிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், இந்தியா டுடே, சி.என்.என், ஆஜ் தக், கூகுள், டுவிட்டர் போன்றவை இதே தவறுகளைச் செய்துள்ளன.