ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெகநாத்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலும் அக்கல்லூரி மாணவர்கள், ஹிந்துக்களின் புத்தாண்டின் முதல் நாளான ‘நவ் சம்வத்ஸர்’ கொண்டாட கல்லூரி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் ஒன்றுகூடினர். அப்போது, அவர்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டனர். இது அங்கு பயிலும் சில மாற்று மத மாணவர்களுக்கு எரிச்சல் அளித்தது. அவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கல்லூரி முதல்வர், அம்ரித் மற்றும் கன்ஷ்யாம் என்ற இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்த்துடன் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 500 ஹிந்து மாணவர்களுக்கு ஹாஸ்டல் கவை மூடி ஒரு நாள் முழுவதும் அவர்களுக்கு உணவளிக்க மறுத்து பட்டினி போட்டார். இது குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது அவர், இது ஒழுங்கு நடவடிக்கை என கூறி தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.