டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத் திருத்த மசோதா, 2022 மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில், மேற்கு வங்கத்தில் உள்ளூர் திருணமூல் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எட்டுபேர் உயிருடன் எரிக்கப்பட்ட பீர்பும் படுகொலை பற்றி குறிப்பிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, “பா.ஜ.க அதன் திட்டங்கள், சித்தாந்தம், எங்கள் தலைவர்களின் புகழ் மற்றும் எங்கள் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற விரும்புகிறது. நாங்கள் எல்லா இடங்களிலும் தேர்தலில் போராடி வெற்றி பெற விரும்புகிறோம். ஆனால், எதிர்க்கட்சித் தொண்டர்களை கொல்வது, தொண்டர்களின் மனைவிகளையும் சகோதரிகளையும் பலாத்காரம் செய்வதன் மூலம் நாங்கள் ஆட்சிக்கு வர விரும்பவில்லை. அது எங்கள் கலாச்சாரம் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தங்கள் சித்தாந்தம், நிலைப்பாடு, பணித்திட்டம் மற்றும் செயல்திறனுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அழகு. அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம் உள்ளவர்கள்தான் இந்த கருத்தை எதிர்ப்பார்கள். ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள் இதனை ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள்’ என்று கூறினார்.