பாரதத்தின் ஸ்டார்ட்அப் இலக்கு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், பாரதத்தின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் குறித்த விவாதத்தில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இன்று நாங்கள் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக பாரதம் உள்ளது. ஆனால் இது போதாது; உலகின் நம்பர் ஒன் ஸ்டார்ட்அப் இலக்காக பாரதம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு சம நிலை மற்றும் சிறந்த வணிக சூழலை வழங்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. துபாய் எக்ஸ்போவில் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்த்து. அங்கு எங்கள் ஸ்டார்ட்அப்களுக்கு நிதி திரட்டவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் ஏஞ்சல் முதலீடுகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அம்சங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான பாரதத்தின் வலுவான நட்புறவை வலுப்படுத்த உதவும்.  எக்ஸ்போ 2020 துபாயில் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய 700 ஸ்டார்ட்அப்கள் அனைத்தும் எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகள்’ என தெரிவித்தார்.