திரிபுராவில் டார்லாங் சமூகத்தை “குகி” என்ற துணைப் பழங்குடியினராக எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் பகுதிகளை மேம்படுத்தவும், பழங்குடியின சமூகத்தின் நலனுக்காகவும் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவ இவர்கள் வெவ்வேறு உப பழங்குடியினராக வசிப்பதால், நீண்ட காலமாக பட்டியலிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். எனவே அவர்களை இப்பட்டியலில் இணைக்கும் பொருட்டு இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். பழங்குடியின மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டை உறுதி செய்யாமல், தேசத்தின் வளர்ச்சியை காண முடியாது என்று பிரதமர் வலியுறுத்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிதியாண்டில் ரூ. 87,585 கோடியில் மத்திய அரசு அவர்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார்.