எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

மேற்கு வங்கத்தில் சட்டசபை கூட்டம் துவங்கியபோது, ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் மமதா பானர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கோரினர். இதற்கு திருணமூல் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ.க  சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், சபையில் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறி, பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை இந்த ஆண்டு முழுதும் சபை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 எம்.பி.க்களை அந்த கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்துதுணை அவைத்தலைவர் அறிவித்தார். அப்போது அவர்களுக்காக போராடிய எந்த கட்சியும், இப்படி தொடர்ந்து ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பா.ஜ.க உறுப்பினர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.