உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதைக் கொண்டாடிய முஸ்லிம் இளைஞர் பாபர் அலியை , அதே மதத்தை சேர்ந்த சில மத வெறியர்கள் கடுமையாகத் தாக்கிக் கொன்றனர். இந்த விவகாரம் சம்பந்தமாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை காவல்துறை தேடி வருகிறது. முன்னதாக,பாபர் அலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அவர் காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் நிலையப் பொறுப்பாளர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோரக்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜே ரவீந்தர் கௌட், இறந்த பாபரின் உறவினர்களின் குடும்பத்தைச் சந்தித்து அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.