யோகி விளைவு

யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற்ற பதினைந்து நாட்களுக்குள் உத்தரப் பிரதேசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயங்கர குற்றவாளிகள் தானாக முன்வந்து சரணடைந்துள்ளனர். அவர்கள் சரணடைந்தது மட்டுமல்லாமல் இனி குற்ற செயல்களை செய்ய மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இதற்கிடையில், சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இரண்டு பயங்கர குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “சட்டம் ஒழுங்கை மேம்படுத்த, மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த மைக்ரோ திட்டமிடல் மூலம் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஃபியாவைக் கட்டுப்படுத்துவது, புதுப்பிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது போன்ற பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன” என்று சட்டம் ஒழுங்குப் பிரிவின் துணை ஆணையர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.