கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க திருவிழா கொடியேற்று விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘பாரதத்தின் ஆன்மிக தலைநகராக தமிழகம் விளங்குகிறது. `செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்பது போல பாரத மக்கள் ஒரே சிந்தனை கொண்டவர்களாக காலம் காலமாக பத்ரகாளியை வழிபடுகின்றனர். பாரதம் வளர்ந்த நாடமாக மாற வேண்டும் எனில் வடக்குக்கும் தெற்குக்கும் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும். அனைவருக்கும் கௌரமான வாழ்க்கையும் சம வாய்ப்பும் கிடைக்க வேண்டும். சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டால் தேசம் மேலும் வளரும். `நான் தமிழ் கற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசி வருகிறேன். இந்தக் கோயிலுக்கு வந்திருக்கும் எழுச்சிமிகு இளைஞர்களையும், இளம் பெண்களையும் பார்க்கும் போது 2045க்குள் பாரதம் ஒரு வல்லரசு நாடாக மாறும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.’ என்றார்.