உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியயி கைப்பற்றியது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன், 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் டேனிஷ் அன்சாரி என்ற ஒரு முஸ்லிம் அமைச்சரும் இடம் பெற்றுள்ளார். இவர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘இந்த நியமனம் மதத்துக்கு அப்பாற்பட்டது. அடிமட்டத் தொண்டனின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இதற்காக பா.ஜ.க தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது, மத அடிப்படையில் அரசியல் செய்யும் சமாஜ்வாதி, காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் விடப்பட்ட அறை. பா.ஜ.க எந்த திட்டத்தையும் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பிரித்து செயல்படுத்துவதில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையிலான திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. முஸ்லிம்களுக்கு பா.ஜ.க மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது’ என்று கூறினார்.