மணிப்பூரில் தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமைக்கப்பட்ட பா.ஜ.க அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் மீதான போர் பிரச்சாரத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இம்பால் கிழக்கு காவல்துறை மற்றும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படை குழு எம்டி முஜிபூர் ரஹ்மான் என்ற ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி ஒருவரைக் கைது செய்தது. அவரிடம் இருந்து 67,900 எஸ்பி காப்ஸ்யூல்கள், 350 WY மாத்திரைகள், 115 N10 மாத்திரைகள், 135 கிராம் ஹெராயின் பவுடர் உள்ளிட்ட பெருமளவிளான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மணிப்பூர் முதல்வராக பதவியேற்றுள்ள நோங்தோம்பம் பிரேன் சிங், ‘சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் நீங்களாகவே உடனடியாக சரணடைந்துவிடுங்கள். அல்லது சட்டப்படி கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.