நுகர்வோர் விழிப்புணர்வு வாரம்

சுதந்திரத்தின் 75வது வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் தர மேம்பாட்டு நடவடிக்கைகளில் இந்திய தர நிர்ணய அமைவனம் என்ற தலைப்பில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைமையிடத்தில் இணையதளக் கருத்தரங்கு நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பி.ஐ.எஸ் தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நுகர்வோர் அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்தும், தரத்தை மேம்படுத்துவதில் அவை பங்காற்றும் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். அரசு மற்றும் நுகர்வோருக்கு இடையே நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் எவ்வாறு இணைப்புப் பாலமாக செயல்படுகின்றன என்று விவரித்தார். இந்திய தர நிர்ணய அமைவனம் அண்மையில் உருவாக்கிய நுகர்வோர் பங்கேற்பு இணையதளம் குறித்து இக்கூட்டத்தில் விவரிக்கப்பட்டது இந்த இணையதளக் கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட நுகர்வோர் அமைப்புகள், அரசு சாராத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.