அகில பாரத பிராமணர் சங்க தேசிய தலைவர் குளத்து மணி, பொதுச்செயலாளர் ராமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீர்காழி அருகே நெம்மேலி கிராமத்தை சேர்ந்த 75 வயது திருக்கோயில் அர்ச்சகர் சூரியமூர்த்தி மீது சிலை திருட்டு குற்றச்சாட்டு கூறி, அவரை கைது செய்துள்ளது கண்டிக்கதக்கது. அவர் மீதான குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. கம்யூனிஸ்ட் கட்சியினரின் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பிராமணர்களை கோயிலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்துள்ளனர். கோயில் குருக்களை விடுதலை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தவறினால் அகில பாரத பிராமணர் சங்கம் அறப்போராட்டத்தில் ஈடுபடும்’ என தெரிவித்துள்ளனர்.