அகதிகளிடம் மதப் பிரச்சாரம்

நோய், சிறைச்சாலை, கடன் என மனிதப் பிரச்சனைகளோ அல்லது மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களோ எதுவாக இருந்தாலும் அந்த சூழலால் பாதிக்கப்பட்ட மக்களை முதலில் வேட்டையாடுவது அனேகமாக கிறிஸ்தவ சுவிசேஷ மிஷனரிகளாகத்தான் இருக்கும். ஒரு சோகத்தில் உதவுவதை போல நடித்து மக்களை மதமாற்றம் செய்து அதன் பலன்களை உடனடியாக அறுவடை செய்ய அவர்கள் கொஞ்சமும் தயங்குவதில்லை. அவ்வகையில் இம்முறை அவர்களின் பெரிய வேட்டைக்களமாகிப்போனது உக்ரைன் அகதிகள் முகாம். உக்ரைன் மக்களில் ஏற்கனவே 80 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் தான். மீதம் இருப்பவர்களையும் மதமாற்றம் செய்து அதனை பணமாக்க, அமெரிக்க ஐரோப்பிய பாதிரிகள் அங்கு படையெடுத்துள்ளனர். உக்ரைனில் போர் வெடித்தவுடன் முதலில் இதில் களமிறங்கிய அமைப்பு  அமெரிக்காவை சேர்ந்த பிராங்க்ளின் கிரஹாமின் அடிப்படைவாத கிறிஸ்தவ சுவிசேஷ அமைப்பான ‘சமாரிடன்ஸ் பர்ஸ்’ “ஏசுவை நேசி” என்று கேட்டு அமெரிக்க போதகர்களால் அப்பாவி அகதிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். அகதிகளிடம் ஆன்லைனில் பிரச்சாரம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை என்பது வேதனையான உண்மை.