பயங்கரவாதிகள் மீது வழக்குப்பதிவு

காஷ்மீர் பயங்கரவாதம் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா நிறுவனர் யாசின் மாலிக், அதன் நிறுவனர் ஹபீஸ் சயீத், காஷ்மீர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானன ரஷீத் இஞ்சினியர், தொழிலதிபர் ஜாகூர் அகமது ஷா வதாலி, பிட்டா கராத்தே, அஃப்தாப் அகமது ஷா, பீர் சைபுல்லா உள்ளிட்ட பலர் மீது ‘உபா’, குற்றவியல் சதி, நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல், சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி பிரவீன் சிங் மார்ச் 16 அன்று பிறப்பித்த இந்த உத்தரவில், “மேற்கண்ட பகுப்பாய்வு சாட்சிகளின் அறிக்கைகள், ஆவண ஆதாரங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரு பொதுவான பிரிவினைவாதத்துடன் இணைத்துள்ளதை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானிய ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவியின் கீழ் பயங்கரவாத அமைப்புகளுடனான அவர்களின் நெருங்கிய தொடர்பை புலப்படுத்துகிறது. எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் தனித்தனியாக பிரிவினைவாத சித்தாந்தம் அல்லது ஜம்மு காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்று வாதிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இரு தரப்பு வாதங்கள், ஆதாரங்கள் பற்றிய விரிவான விவாதம் செய்யப்பட வேண்டும்’ என தெரிவித்தார்.