அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உக்ரைன் போர் தாக்கம் தொடர்பாக சர்வதேச நிதியத்தின் மாநாடு நடந்தது. இதில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா பேசுகையில், ‘பாரதம் அதன் நிதி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக கையாள்கிறது. அதேசமயம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதன் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சவாலை சமாளிக்க பாரதம் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்’ என கூறினார். இம்மாநாட்டில், சர்வதேச நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குனரான கீதா கோபிநாத் பேசுகையில், ‘உக்ரைன் போர் ,பாரதம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் பாதித்துள்ளது. பாரதம் கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. அதன் விலை உயர்வு, பாரத குடும்பங்களின் வாங்கும் திறனை பாதிக்கும். பாரதத்தின் பணவீக்கம், 6 சதவீதத்தை நெருங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.