கம்யூனிஸ்ட்டுகள் வாக்கு வங்கி

ஒரு காலத்தில் பெரிய கட்சியாக இருந்தது சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ.எம் என்ர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். இன்று, கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காணமல் போய்க்கொண்டுள்ளன. தமிழகத்தில் இவ்விரண்டு கட்சிகளும் தி.மு.க, அ.தி.மு.க  என மாறி மாறில் அவற்றின் முதுகில் வேண்டாத சுமையாக ஏறி பயணம் செய்து வருகின்றன. இதனை வைத்து தாங்கள் ஏதோ மிக பலமாக இருப்பதாக காட்டிக்கொள்கின்றன. ஆனால் அக்கட்சிகளின் உண்மையான வாக்கு வங்கி என்னவென்பதை சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் உணர்த்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சி.பி.ஐ பெற்ற வாக்குகள் 0.07 சதவீதமும், சி.பி.ஐ.எம் 0.01 சதவீதம் பெற்றன. மணிப்பூரில் சி.பி.ஐ 0.06 சதவீதம் பெற்றது. உத்தராகண்டில் சிபி.ஐ மற்றும் சி.பி.ஐ.எம் தலா 0.04 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. பஞ்சாப்பில் சி.பி.ஐ 0.05 சதவீத வாக்குகளும் சி.பி.ஐ.எம் 0.03 சதவீத வாக்குகளும் பெற்று நோட்டோவுடன் போட்டியிட்டன. கோவாவில் இக்கட்சிகள் 2017ல் இணைந்து பெற்ற வாக்குகள் மொத்தமே 356. அப்போது முதல் அவை அங்கு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.