இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. கடந்த 2004 முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2019 முதல் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ‘விவிபாட்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்து வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து, ‘உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்’ என்னும் செயலி, தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது ஒரு நல்ல யோசனை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது’ என்று கூறினார்.