மாணவர்களின் 75 செயற்கை கோள்கள்

பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை ‘பாரதத்தின் அம்ருத் மகோத்சவம்’ என்ற பெயரில் தேசம் கொண்டாடி வருகிறது. அவ்வகையில் விண்வெளித் துறையின் செயல்பாடுகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் 75 செயற்கைகேள்களை தயாரிக்க உள்ளனர். இவை வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்குள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முன்பதிவில் 150க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பதிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் 7 கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். மாணவர்களும் விண்வெளியில் சாதிக்க முடியும், மாணவர்களின் வெற்றியும் வளர்ச்சியும், நாட்டின் வெற்றியையும் வளர்ச்சியையும் குறிக்கும் என்பதை இம்முயற்சி பறைசாற்றும்.