சென்னை துரைப்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட ‘நம் குடியிருப்பு; நம் பொறுப்பு’ திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் குடியிருப்போர் நலச்சங்க பேனரை தி.மு.கவை சேர்ந்த ராமு என்பவரின் தலைமையில் சென்ற ஆறு பேர் கொண்ட சமூக விரோத கும்பல் அந்த பேனரை கிழித்ததுடன் நலச்சங்க நிர்வாகிகளின் வீடுகளில் புகுந்து பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், நலச்சங்கம் துவங்கப்பட்டதன் நோக்கமே சீர்குலைய வாய்ப்புள்ளதாக, நலச்சங்க நிர்வாகிகள், குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அராஜகத்தில் ஈடுபட்ட ராமு, 195வது வார்டு தி.மு.க கௌன்சிலர் ஏகாம்பரம் ஆதரவாளர். அவரின் துாண்டுதலின் படியே இந்த அராஜகம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். வழக்கம்போல இந்த புகாரை கௌன்சிலர் ஏகாம்பரம் மறுத்துள்ளார். அதுசரி, மக்களே நேரடியாக அதிகாரிகளிடம் பேசி தங்கள் பிரச்சனையை தீர்த்துக்கொண்டால் இவர்கள் எப்படி கல்லா கட்டுவது, போட்ட பணத்தை எப்படி எடுப்பது?