உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. கார்கிவ் பகுதியில் மாணவர்கள் யாரும் இல்லை. ஆனால், உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள சுமி மற்றும் பிசோச்சின் நகரங்களில் உள்ளவர்கள்தான் இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. அவர்களை பாதுகாப்பாக மீட்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அங்கு தொடர்ந்து நடைபெறும் போர், வாகன ஏற்பாட்டில் சிக்கல், உள்ளூர் குற்றவாளிகளின் வன்முறை போன்றவை பெரும் சவாலாக உள்ளன. அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக போர் நிறுத்தம் செய்வதற்கு இருதரப்புகளையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மாணவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்குமிடங்களுக்குள் இருக்கவும், தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியுள்ளார்.