சட்டவிரோத அம்பேத்கர் சிலை

மத்தியப் பிரதேச மாநிலம் லஹார் என்ற பகுதியில் உள்ள ஒரு பட்டியலின குடியிருப்பில் உள்ள மக்கள், அங்குள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக, அங்கு இரவோடு இரவாக, எவ்வித அனுமதியும் இன்றி டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிறுவினர். இதுகுறித்த புகார் எழுந்ததையடுத்து, சிலையை அகற்ற அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், அதிகாரிகளை ​​சாணம் மற்றும் கற்களால் தாக்கினர். அருகில் உள்ள காய்ந்த மரங்கள், சில வீடுகளுக்கும் தீ வைத்து எரித்தனர். எனினும் அதிகாரிகள் சிலையை அகற்றினர். அங்கு வந்த தாசில்தார், தகுந்த இடத்தில் சட்டபூர்வமாக அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.