சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் நிலேஷ் சர்மா, இந்தியா ரைட்டர்ஸ் என்ற செய்தி இணையதளத்தை நடத்தி, டிஜிட்டல் தளங்களில் ‘குர்வா கே மதி’ என்ற மிகப் பிரபலமான நையாண்டி நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்தியா ரைட்டர்ஸ் இதழின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். அவரது நையாண்டி நிகழ்ச்சியால் அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களின் இமேஜ் பாதிக்கப்பட்டது எனக்கூறி, நிஷாத் என்பவர் சத்தீஸ்கர் காவல்துறையின் சைபர் செல்லில் புகார் அளித்தார். உடனடியாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேலின் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 2003 முதல் 2018 வரை அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதும் ஷர்மா அரசியல் நையாண்டி நிகழ்ச்சியை நடத்தினார், அப்போதைய பா.ஜ.க முதல்வர் ரமன் சிங் உட்பட சத்தீஸ்கர் பா.ஜ.க தலைவர்களை கிண்டல் செய்தார். ஆனால், நேர்மறையாக சிந்தித்த பா.ஜ.க தலைவர்கள், அதில் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டனரே தவிர இதுபோல கைது செய்யவில்லை. நேரு குடும்ப வாரிசுளோ அவர்களின் கட்சியினரோ கருத்துச் சுதந்திரம், பத்திரிகை உரிமையைப் பாதுகாப்பது பற்றி பிரசங்கிக்கின்றனரே தவிர அவற்றை பின்பற்றவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.