ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் உள்ள ரூப்புரா அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையான நிர்மலா காமத் என்பவர், சில நாட்களுக்கு முன் தனது பள்ளி மாணவர்களிடம், ‘ஹிந்து மதம்: தர்மமா கலங்கமா?’, என்ற சிறு புத்தகத்தை விநியோகித்தார். மேலும், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அர்ச்சகர்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட நிதியை தங்கள் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்துகின்றனர் என்றும் ஹிந்துக்கள் புனிதமாக வழிபடும் பசுக்களை இழிவாகவும் பேசியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். மேலும், பள்ளிக்கு பூட்டும் போட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த முதன்மை மாவட்டக் கல்வி அதிகாரி பிரம்மா ராம் சௌத்ரி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணை முடியும் வரை நிர்மலா காமத்தை தற்காலிக இடமாற்றம் செய்து கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியமர்த்தியுள்ளார்.