ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் சில நட்களுக்கு முன்பாக போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் போடும் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அதேபோல குண்டூஸ் நகரில் 6 போலியோ தடுப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்பட்டார். இப்படி வெவ்வேறு நிகழ்வுகளில் போலியோ தடுப்புப் பணியாளர்கள் 8 பேர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு போலியோ தடுப்புப் பணியாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.