மத்திய அரசின் முன்னணி தொலைதொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான, டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் ( சி.டாட்), 12வது ஏஜிஸ் கிரஹாம் பெல் விருதுகள் விழாவில், 3 விருதுகளை வென்றது. பல்வேறு பிரிவுகளில் புதுமையான தொலை தொடர்பு தீர்வுகளை உள்நாட்டில் உருவாக்கியதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சி.டாட் தனிமைபடுத்துதல் எச்சரிக்கை கருவி, சி.டாட் சம்வாத் என்ற பாதுகாப்பான தகவல் மற்றும் அழைப்புக்கான ஒருங்கிணைந்த தளம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உள்நாட்டு முன்னெச்சரிக்கை தளம் ஆகிய 3 பிரிவுகளில் முதன்மை வெற்றியாளராக சி-டாட் நிறுவனம் அறிவிக்கப்பட்டது. இதைத்தவிர, இன்போசிஸ், எல்&டி டெக்னாலஜிஸ், டி.டாட், ஐ.கே.எஸ் ஹெல்த், விப்ரோ, ரிலையன்ஸ் ஜியோ, நோக்கியா, ஹெச்.சி.எல் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.