பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் உள்ள யூகோ வங்கியின் கிளைக்கு வந்த அதன் வாடிக்கையாளரான ஒரு முஸ்லிம் பெண் பணம் பெறுவதற்காக காசோலை கொடுத்தார். அதில் அவரின் கையெழுத்து சற்று தெளிவற்று இருந்ததால், முக அடையாளம் காண அந்த பெண்ணின் ஹிஜாபை அகற்றுமாறு வங்கி அதிகாரி கேட்டுள்ளார். உடனே அந்த பெண்ணும் அவரது தந்தையும் ஹிஜாபை அகற்ற மறுத்தது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கி காசாளர், கிளை மேலாளரை மிரட்டத் தொடங்கினர். வங்கி ஊழியர்கள் மீது காவல்துறையில் வழக்கு போடுவதாக மிரட்டினர். பண கோரிக்கைகளை செயலாக்குவதற்கு முன் வாடிக்கையாளர்களின் கையொப்பம், முக அடையாளம், புகைப்படத்தை சரிபார்க்க வங்கி ஊழியர்களுக்கு அதிகாரம் உள்ளது. சரியான அடையாளம் பொருந்தவில்லை எனில் சேவைகளை மறுக்கவும் வங்கிக்கு அதிகாரம் உள்ளது என கூறிய பின் அவருக்கான சேவை அளிக்கப்பட்டது. பாரதத்தில் கலவரம் ஏற்படுத்தும் முஸ்லிம் பயங்கரவாதிகளின் நோக்கத்திற்கு சமீப காலமாக புர்காவும் ஹிஜாபும் புதிய போர்க்களமாக மாறிவிட்டன.