தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். ஆனால், பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் விநியோகம், தேர்தல் நடக்கும் இடத்தின் அருகில் தேர்தலின்போதே பொருட்கள் விநியோகம் என தொடர்ந்து பல முறைகேடுகள் நடைபெற்றன. மேலும், அத்துமீறி உள்ளே புகுந்து கள்ள ஓட்டு போட்ட ஆளும் கட்சி குண்டர்கள், காவல் அதிகாரிகளை மிரட்டிய தி.மு.க ரௌடிகள் என ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் அப்பட்டமாக இத்தேர்தலில் வெளிப்பட்டது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகியும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, புர்காவை நீக்கி முகத்தை காட்ட சொன்ன பா.ஜ.க நிர்வாகியை மட்டும் கைது செய்து தனது நேர்மையையும் வீரத்தையும் பறைசாற்றிக்கொண்டது.