இலக்கை நெருங்கும் பாரதம்

பாரதத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் ஜனவரி 2022ல், 61.41 பில்லியன் டாலர்களை எட்டியது. இது ஜனவரி 2021’ஐ விட 36.76 சதவீத நேர்மறையான வளர்ச்சி, ஜனவரி 2020’ஐ விட 38.90 சதவீத நேர்மறையான வளர்ச்சி. பாரதத்தின் ஏற்றுமதி அதிகரிப்பால் வர்த்தக பற்றாக்குறை ஜனவரியில் கடந்த ஐந்து மாதங்களில் குறைந்த அளவை தொட்டது. 2021 – 2022 நிதியண்டின் முதல் 10 மாதங்களில் நமது நாட்டின் ஏற்றுமதி 336 பில்லியன் டாலர்களை கடந்துவிட்ட சூழலில், பாரதத்தின் ஏற்றுமதி மத்திய அரசு நிர்ணயித்த 400 பில்லியன் டாலர் என்ற இலக்கை நெருங்கி வருகிறது. மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கும் திட்டங்களின் பயனாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.