கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கேரள மாநிலத்தில் ஹிந்து அமைப்பினர், பா.ஜ.கவினர் மீதான வன்முறைகள் தொடர்கதையாகி வருகின்றன. கம்யூனிச அரசும் இதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, அவர்களுக்கு மறைமுகமாக துணைபோகிறது என பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 16 அன்று இரவு 12:30 மணியளவில் ஆலப்புழா மாவட்டம், ஹரிபாட் குமாரபுரம் அருகே உள்ள வாரியம்கோட்டைச் சேர்ந்த சரத் சந்திரன் என்ற பா.ஜ.க தொண்டரை சில மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கி, கத்தியால் குத்தி கொன்றனர். கோயில் திருவிழாவின் போது அவருடன் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணம் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நந்து பிரகாஷ் என்ற நபரின் தலைமையிலான போதைப்பொருள் கும்பல் இதற்கு காரனமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. எனினும், இதுகுறித்த முழுமையான விசாரனைக்குப் பிறகே உண்மை வெளியாகும்.